கிரிக்கெட்

பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்...பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை + "||" + Mohammed Shami's wife Hasin Jahan files petition against Police negligence

பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்...பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை

பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்...பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை
பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்... வாழ்த்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
கொல்கத்தா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி, சமூகவலைத்தளங்களில் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருப்பதால், உரிய பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில், இவர் சமீபத்தில் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜைக்காக அனைத்து ஹிந்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்

அவரின் இந்த பதிவிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கொலை செய்து விடுவோம், பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் மோசமான முறையில் அவருக்கு மிரட்டல்கள் வந்தன.

இதனால், அவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 9 அன்று புகார் அளித்தார். ஆனால் அவருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காத காரணத்தினால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

தன் மனுவில், இந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.இந்த சூழ்நிலையில் தான் எதுவும் செய்ய முடியாத நிலையில், என் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி கவலையில் இருக்கிறேன்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறேன். பாதுகாப்பற்ற நிலையில் தான் இருப்பதாக உணர்கிறேன். இது தொடர்ந்தால் மனதளவில் அழுத்தத்துக்கு ஆளாவேன்.எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மகள்களுடன் தனியாக வாழ்கிறேன். அதனால் பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நொடியும் எனக்கு கெட்ட கனவாக உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் என்று கோரியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கடந்த பத்தாண்டுகளில் சிறந்த வீரருக்கான விருதுக்கு விராட் கோலி, அஸ்வின் பரிந்துரை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய வீரர் விருதுக்கு விராட் கோலி, அஸ்வினை பரிந்துரைத்து உள்ளது.
2. ஐபிஎல் போட்டி: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்
ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து உள்ளது.
3. ஐபிஎல் 9-வது அணியை வாங்க மோகன் லால் - சல்மான் கான் மற்றும் தொழில் அதிபர்களிடையே போட்டி
ஐபிஎல் 9 வது அணியை வாங்க மோகன் லால் - சல்மான் கான் மற்றும் தொழில் அதிபர்களிடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.
4. ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சிக்கு ரூ.2400 கோடி விளம்பர வருவாய்; ஆனாலும் வருத்தம் ஏன்...?
13 வது சீசன் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பிய தொலைக்காட்சி பெரிய அளவில் வருமானம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. பீகார் அரசியல் : கிரிக்கெட் வீரரில் இருந்து... முதல்வர் கனவில் தேஜஸ்வி யாதவ்
பீகார் அரசியலில் கிரிக்கெட் வீரரில் இருந்து... முதல்வர் போட்டியாளராக தேஜஸ்வி யாதவ் கடந்து வந்த பாதை