கிரிக்கெட்

ஒரு நாள் தொடரை வெல்வது யார்?இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல் + "||" + Who will win the one day series? England - Australia clash in the last match today

ஒரு நாள் தொடரை வெல்வது யார்?இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்

ஒரு நாள் தொடரை வெல்வது யார்?இங்கிலாந்து - ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் தொடரை வெல்லும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது. இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் முன்னெச்சரிக்கையாக இரண்டு ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இன்றைய ஆட்டத்தில் களம் திரும்புவார் என்று தெரிகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.