கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில்‘டோனியின் ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்’-ஷேவாக் கருத்து + "||" + Watching MS Dhoni back would be a delight: Virender Sehwag on IPL

ஐ.பி.எல். கிரிக்கெட்டில்‘டோனியின் ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்’-ஷேவாக் கருத்து

ஐ.பி.எல். கிரிக்கெட்டில்‘டோனியின் ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்’-ஷேவாக் கருத்து
ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனியின் ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் என ஷேவாக் தெரிவித்துள்ளார்.
துபாய், 

ஜ.பி.எல் கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் அபுதாபியில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை. யூகங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். 

ரசிகர்களை போல் டோனியின் ஆட்டத்தை காண இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக்கும் ஆவல் கொண்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷேவாக் கூறுகையில், ‘இந்த ஐ.பி.எல். தொடர் ஒவ்வொருவருக்கும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன். வீரர்களும், ரசிகர்களும் டோனி மீண்டும் களம் திரும்புவதை பார்க்க இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இது மகிழ்ச்சியாக இருக்கும். 

ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடி பழைய ஆட்டங்களின் வீடியோ காட்சிகளை பார்த்து ஆராய்ந்தேன். இதில் எனது இன்னிங்சும் அடங்கும். இந்தியர்களாகிய நமது வாழ்க்கையில் கிரிக்கெட்டும் ஒரு பகுதியாகி விட்டது. மீண்டும் கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் 2020- அதிக சம்பளம் பெறும் வீரர்கள் யார்? யார்?
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
2. ஐக்கிய அரபு அமீரக வெப்பநிலையை சமாளிப்பது சவாலாக இருக்கும்-டிவில்லியர்ஸ் சொல்கிறார்
ஐக்கிய அரபு அமீரக வெப்பநிலையை சமாளிப்பது சவாலாக இருக்கும் என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
3. இன்னும் 5 முதல் 7 ஆண்டுகள் என்னால் விளையாட முடியும்: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
சூதாட்ட புகாரில் சிக்கியதால் 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்தின் தடைக்காலம் இன்றோடு நிறைவடைகிறது.
4. கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான்: தோனி டுவிட்
கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான். என்னை பாராட்டியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி என தோனி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
5. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டோனியின் கேப்டன்ஷிப், விக்கெட் கீப்பிங் எப்படி?
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் டோனியின் கேப்டன்ஷிப் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் செய்த சாதனைகள் வெளியாகி உள்ளன.