கிரிக்கெட்

விளையாட்டு துளிகள்...... + "||" + Bangalore Royal Challengers captain Virat Kohli

விளையாட்டு துளிகள்......

விளையாட்டு துளிகள்......
விளையாட்டு துளிகள்......
* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான ஸ்டீவன் சுமித் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு நடந்த பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் 3 ஆட்டங்களிலும் விளையாடவில்லை. அவருக்கு தலையில் ஏற்பட்ட அதிர்வின் பாதிப்பு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். அவர் தலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இருந்து மீண்டு முழு உடல் தகுதியை எட்டினால் தான் ஐ.பி.எல். போட்டியில் களம் இறங்க அனுமதிக்க வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது. இதனால் ஸ்டீவன் சுமித் ஐ.பி.எல். தொடக்க லீக் ஆட்டங்களில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.


* ‘கடந்த சீசனில் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாக செயல்பட்டனர். இந்த முறையும் அவர்கள் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள்’ என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

* பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டிக்கான மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் பழகி விட்டோம். அந்த சூழ்நிலையில் நெருக்கடி இல்லாமல் இயல்பாக செயல்படுவதில் எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ரசிகர்கள் இன்றி விளையாட போவது முதலில் விசித்திரமாக தோன்றியது. ஆனால் பயிற்சிக்கு பிறகு அந்த மனநிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.