கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சலுகை + "||" + IPL Offer for England and Australia players coming to participate in the tournament

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சலுகை

ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சலுகை
கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையின்படி அமீரகம் வரும் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
துபாய்,

சர்வதேச போட்டியை முடித்துக் கொண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக மோர்கன், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் சுமித், வார்னர், ஆரோன் பிஞ்ச், ஹேசில்வுட் உள்பட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் 21 பேர் துபாய்க்கு நேற்று புறப்பட்டனர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறையின்படி அமீரகம் வரும் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஏற்கனவே பாதுகாப்பு வளையத்தில் இருந்ததால் தங்களுக்குரிய தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டும் என்று இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்த நிலையில் அவர்களின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. 36 மணி நேரம் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும் என்று ஐ.பி.எல். தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் ஐ.பி.எல்.-ல் முதல் ஆட்டத்தில் இருந்தே விளையாட முடியும்.