கிரிக்கெட்

தோனி ஓர் அபாயகரமான வீரர்; ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் + "||" + Dhoni is a dangerous player; Former Australian captain Ricky Ponting

தோனி ஓர் அபாயகரமான வீரர்; ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்

தோனி ஓர் அபாயகரமான வீரர்; ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாயகரமான வீரர் என்றால் அது தோனி தான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன்,

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஓய்வு பெற்று விட்டார்.  எனினும், ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கிறார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறும்பொழுது, தோனி ஐ.பி.எல். தொடரில் வெற்றிகளை குவிக்க மிகுந்த ஆவலுடன் இருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.  சுமார் 438 நாட்களுக்கு பிறகு தோனி நாளை கிரிக்கெட் களம் காண உள்ளார்.

ஐ.பி.எல். வரவலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை அணி தான் என்றும் தோனி 4வது இடத்தில் களமிறங்கினால் அதிக ரன்களை குவிப்பது உறுதி என்றும் பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான நாளை நடைபெறும் முதல் ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி சார்பில் தோனி விளையாடி அசத்த உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. "800" பட விவகாரம்; கலைத்துறையில் அரசியல் தலையீடு முறையற்றது: சரத்குமார் அறிக்கை
கலைத்துறையில் அரசியல் தலையீடு மற்றும் எதிர்ப்புகள் முறையற்றது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
2. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வெங்கடேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று அத்தொகுதி எம்.பி. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
3. ஜே.இ.இ. முதன்மை தேர்வு: விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் எழுதினார்கள்; மத்திய மந்திரி தகவல்
ஜே.இ.இ. முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 74 சதவீதம் பேர் தேர்வை எழுதியதாக மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
4. மும்பை பெயரை கெடுப்பதா? கங்கனாவுடன் நக்மா மோதல்
மும்பை பெயரை கெடுப்பதா? என கங்கனாவுக்கு நக்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
5. 50 கோடி பயனாளர்களை கொண்ட உலகின் பெரிய இணையதள பொருளாதார நாடு இந்தியா; மத்திய மந்திரி போக்ரியால் பெருமிதம்
50 கோடி பயனாளர்களுடன் உலகின் அதிவேக வளர்ச்சி மற்றும் பெரிய அளவிலான இணையதள பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என மத்திய மந்திரி போக்ரியால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.