ஐ.பி.எல். போட்டிக்காக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் அமீரகம் சென்றனர்


ஐ.பி.எல். போட்டிக்காக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் அமீரகம் சென்றனர்
x
தினத்தந்தி 18 Sep 2020 10:00 PM GMT (Updated: 18 Sep 2020 7:44 PM GMT)

மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் கடந்த புதன்கிழமை இரவு முடிவடைந்தது.

துபாய்,

மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் கடந்த புதன்கிழமை இரவு முடிவடைந்தது. அந்த போட்டி நிறைவு பெற்றதும் ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளில் இடம் பெற்றுள்ள ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், கம்மின்ஸ் (4 பேரும் ஆஸ்திரேலியா), இயான் மோர்கன், ஜோஸ்பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர் (மூவரும் இங்கிலாந்து) உள்பட ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்த 21 வீரர்கள் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சென்றனர். அங்கிருந்து அவர்கள் தாங்கள் அங்கம் வகிக்கும் அணியினர் தங்கி இருக்கும் ஓட்டல் அறைக்கு சென்று தனிமைப்படுத்தி கொண்டனர். கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்துக்குள் நடைபெற்ற போட்டி தொடரில் பங்கேற்று விட்டு பாதுகாப்பான முறையில் வருவதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் 6 நாட்களுக்கு பதிலாக 36 மணி நேரம் தங்களை தனிமைபடுத்திக் கொண்டாலே போதும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் சலுகை அளித்து இருப்பதால் அவர்கள் தொடக்க லீக் ஆட்டத்தில் இருந்தே விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு ‘நெகட்டிவ்’ என்று வந்தால் அவர்கள் உடனடியாக தங்கள் அணி வீரர்களுடன் இணைந்து களம் இறங்க முடியும்.

Next Story