கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 100 ரன்களைக் கடந்தது மும்பை + "||" + IPL Cricket: Mumbai crossed 100 runs

ஐ.பி.எல். கிரிக்கெட்: 100 ரன்களைக் கடந்தது மும்பை

ஐ.பி.எல். கிரிக்கெட்: 100 ரன்களைக் கடந்தது மும்பை
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் தற்போது பேட்டிங் செய்து வரும் மும்பை அணி 100 ரன்களைக் கடந்துள்ளது.
அபுதாபி,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அபிதாபியில் இன்று நடைபெற்று வரும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.


இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, குயின்டன் டி காக் களமிறங்கினர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய ரோகித் சர்மா(12 ரன்கள்), சென்னை அணியின் பியுஷ் சாவ்லா வீசிய 5வது ஓவரில் சாம் கர்ரனிடம் கேட்ச் ஆனார். இதனை தொடர்ந்து சாம் கர்ரன் வீசிய 6வது ஓவரில் சேன் வாட்சனிடம், குயின்டன் டி காக்(33ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து சூர்யகுமார் யாதவ்-சவுரப் திவாரி ஜோடி சேர்ந்தனர். தீபக் சாஹர் வீசிய 11வது ஓவரில் சூர்யகுமார் யாதவ்(17 ரன்கள்) சாம் குர்ரனிடம் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, வந்த வேகத்தில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனையடுத்து மும்பை அணி தற்போது 12வது ஓவரில் 3 விக்கெட் இழப்புடன் 100 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் குவிப்பு
ஐதரபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 154 ரன்கள் எடுத்துள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 84 ரன்களில் சுருண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி 84 ரன்கள் எடுத்துள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிவேக பவுலர் நோர்டியா: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார்
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிவேக பவுலரான நோர்டியா, ஸ்டெயின் சாதனையை முறியடித்தார்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணி 6-வது வெற்றி: ராஜஸ்தானை தோற்கடித்தது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை தோற்கடித்து டெல்லி அணி 6-வது வெற்றியை பெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்தது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.