கிரிக்கெட்

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி; சென்னைக்கு 163 ரன்கள் இலக்கு + "||" + IPL Cricket match against Mumbai; Target of 163 runs to Chennai

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி; சென்னைக்கு 163 ரன்கள் இலக்கு

மும்பைக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி; சென்னைக்கு 163 ரன்கள் இலக்கு
ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் மும்பை அணி 162 ரன்கள் குவித்துள்ளது.
அபுதாபி,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. அபிதாபியில் இன்று நடைபெற்று வரும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.


இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, குயின்டன் டி காக் களமிறங்கினர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய ரோகித் சர்மா(12 ரன்கள்), பியுஷ் சாவ்லா வீசிய 5வது ஓவரில் சாம் கர்ரனிடம் கேட்ச் ஆனார். இதனை தொடர்ந்து சாம் கர்ரன் வீசிய 6வது ஓவரில் சேன் வாட்சனிடம், குயின்டன் டி காக்(33ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து சூர்யகுமார் யாதவ்-சவுரப் திவாரி ஜோடி சேர்ந்தனர். தீபக் சாஹர் வீசிய 11வது ஓவரில் சூர்யகுமார் யாதவ்(17 ரன்கள்) சாம் குர்ரனிடம் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, வந்த வேகத்தில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதனையடுத்து மும்பை அணி 12வது ஓவரில் 3 விக்கெட் இழப்புடன் 100 ரன்களைக் கடந்தது.

அரை சதத்தை நோக்கி முன்னேறிய சவுரப் திவாரி(42 ரன்கள்) ஜடேஜா வீசிய 15வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா(14 ரன்கள்) ஜடேஜா வீசிய அதே ஓவரில் கேட்ச் ஆனார். பவுண்டரி லைனுக்கு அருகில் நின்ற டுபிஸிஸ் இந்த இரண்டு கேட்ச்களையும் அட்டகாசமாக பிடித்து அசத்தினார்.

இதற்கு அடுத்து வந்த க்ருனால் பாண்டியா 3 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ஆட்டத்தின் 19வது ஓவரில் கெய்ரோன் பொல்லார்டு(18 ரன்கள்) விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். ட்ரெண்ட் போல்ட்(0 ரன்கள்), ஜேம்ஸ் பேட்டின்சன்(11 ரன்கள்) வந்த வேகத்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. ராகுல் சாஜர்(2 ரன்கள்) மற்றும் பும்ரா(5 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்க உள்ளது.