கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ டீ ஸ்பான்சர் சக்ரா கோல்டு + "||" + Chakra Gold is the official tea sponsor of the Chennai Super Kings

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ டீ ஸ்பான்சர் சக்ரா கோல்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ டீ ஸ்பான்சர் சக்ரா கோல்டு
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது.
சென்னை,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்று விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ தேனீர் (டீ) ஸ்பான்சராக டாடா டீ சக்ரா கோல்டு இணைந்துள்ளது.


இது குறித்து டாடா நுகர்வோர் பொருட்கள் மார்க்கெட்டிங் துணைத்தலைவர் புனீத் தாஸ் கூறுகையில், “தமிழர்களுக்காக சிறந்த முறையில் தயாரித்து, மனம் கவரும் வடிவமைப்பில் வழங்கப்படும் டாடா டீ சக்ரா கோல்டு தமிழர்கள் வாழ்வோடு ஒன்றிணைந்ததாகும். ஐ.பி.எல். போட்டி தொடங்கி உள்ள நிலையில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பெருமையின் அடையாளங்களில் ஒன்றாக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளங்கி வருகிறது. இந்த அணி மாநிலத்தில் பலதரப்பட்ட மக்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைத்து உற்சாகமாக கொண்டாட வைக்கிறது. அனைத்து தரப்பு மக்களாலும் அதிகமாக நேசிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ டீ ஸ்பான்சராக இணைவதில் பெருமிதம் அடைகிறோம்’ என்றார்.

‘எங்களது அதிகாரபூர்வ டீ ஸ்பான்சராக சக்ரா கோல்டு இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் குறிப்பிட்டார்.