கிரிக்கெட்

20 -ஓவர் போட்டிகளில் புதிய சாதனை படைத்த டோனி..! + "||" + MS Dhoni creates new world record in Chennai Super Kings’ win vs Mumbai Indians

20 -ஓவர் போட்டிகளில் புதிய சாதனை படைத்த டோனி..!

20 -ஓவர் போட்டிகளில்  புதிய சாதனை படைத்த  டோனி..!
436 நாட்களுக்குப் பிறகு டோனி மீண்டும் கிரிக்கெட் களம் திரும்பியது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு அறிவித்த பிறகு முதன் முறையாக டோனி நேற்று ஐபிஎல் போட்டியில் களம் கண்டார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. மும்பைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. ஏறத்தாழ 436-நாட்களுக்குப் பிறகு டோனி மீண்டும் விளையாடியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

நேற்று நடைபெற்ற போட்டியில், விக்கெட் கீப்பர் டோனி இரண்டு கேட்ச்களை பிடித்தார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 250- பேரை ஆட்டமிழக்கச்செய்து (கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்) எடுத்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். இந்தப்பட்டியலில் 238-விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் இரண்டாவது இடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக் 214-பேரை ஆட்டமிழக்கச்செய்து 3-வது இடத்திலும் உள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. தன் பெயரில் வீடு கட்டிய ரசிகருக்கு டோனி உருக்கமான நன்றி!
டோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டை மஞ்சள் நிற பெயிண்டினால் அலங்கரித்து, அதில் டோனியின் படத்தை வரைந்து அசத்தினார். சமூக வலைத்தளங்களில் வைரலாக சென்றது.
2. இந்த ஆண்டு எங்களுக்கானதாக அமையவில்லை - தோல்விக்குப் பிறகு டோனி பேட்டி
நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பலாக ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்றைய போட்டியிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
3. நடுவரின் முடிவை மாற்றும் வகையில் டோனி நடந்து கொண்டாரா?
ஷர்துல் தாகூர் வீசிய பந்து ஒன்று ஆஃப் சைடில் ஓரமாகச் சென்றது. அதை ரஷித் கானால் அடிக்க முடியவில்லை.
4. பஞ்சாப்புக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டோனி கூறியது என்ன?
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்தாடியது.
5. ஐபிஎல் கிரிக்கெட்; டோனி மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.