கிரிக்கெட்

டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்கு + "||" + IPL Cricket against Delhi : Target of 158 runs to Punjab

டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்கு

டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்கு
இன்றைய ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 157 ரன்கள் எடுத்துள்ளது.
துபாய்,

துபாயில் இன்று நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ஷிகர் தவான்(0 ரன்கள்) ரன் அவுட் ஆகி டெல்லி ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமளித்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனையடுத்து 4வது ஓவரில் ஷிம்ரான் ஹெட்மேயர்(7 ரன்கள்) கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் டெல்லி அணி ஆரம்பத்திலேயே சற்று தடுமாறியது.

இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் இருவரும் சற்று நிலைத்து நின்று ஆடினர். இந்நிலையில் ரிஷப் பண்ட்(31 ரன்கள்) பஞ்சாப் அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிஷ்னோய் வீசிய 14வது ஒவரில் பவுல்ட் ஆனார். அடுத்த ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர்(39 ரன்கள், 3 சிக்ஸர்) கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதற்கிடையில் அக்ஸர் பட்டேல்(6 ரன்கள்), ரவிச்சந்திரன் அஸ்வின்(4 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்(3 சிக்ஸர், 7 பவுண்டரி) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தைக் கடந்தார்.

ஆட்டத்தின் 20வது ஓவரில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்(21 பந்துகள், 53 ரன்கள்) ரன் அவுட் ஆனார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. டெல்லியில் புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது.
4. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 3 மாவட்டங்களில் மாநாடு; கர்நாடக விவசாயிகள் சங்கம் முடிவு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 3 மாவட்டங்களில் மாநாடு நடத்த கர்நாடக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.