கிரிக்கெட்

விளையாட்டு துளிகள்.... + "||" + Sports drops

விளையாட்டு துளிகள்....

விளையாட்டு துளிகள்....
இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) குடும்பத்துடன் அமீரகம் வந்துள்ளார். கொரோனா தடுப்பு நடைமுறையின்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் ராஜஸ்தான் அணியின் முதலாவது ஆட்டத்தில் (22-ந்தேதி சென்னைக்கு எதிரான) தன்னால் விளையாட முடியாது என்று தெரிவித்துள்ளார்.


* ‘இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன். போட்டி எங்கு நடந்தாலும் எப்போதும் எனது ஆதரவு மும்பை அணிக்கு உண்டு. மும்பை மற்றும் இந்தியன்ஸ் ஒன்றிணையும் போது அது மும்பை இந்தியன்ஸ் ஆகிறது’ என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

* ‘இங்கிலாந்து ஒரு நாள் தொடருக்காக கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தோம். அதில் இருந்து ஐ.பி.எல். போட்டிக்காக இப்போது இன்னொரு பாதுகாப்பு வளையத்தில் இணைந்துள்ளோம். இது மிகவும் சவாலானது. அதுவும் கடுமையான கட்டுப்பாடுகளால் குடும்பத்தினர் உடன் இல்லாதது இன்னும் கடினமானது’ என்று ஆஸ்திரேலிய வீரரும், ஐதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் கூறியுள்ளார்.