கிரிக்கெட்

வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி? + "||" + Will Bangalore start with victory?

வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?

வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
கடந்த ஆண்டு கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை பரிகாரம் தேடும் வகையில் விளையாடும் என்று நம்பலாம்.
வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?

கடந்த ஆண்டு கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை பரிகாரம் தேடும் வகையில் விளையாடும் என்று நம்பலாம். புதிதாக அணிக்கு வாங்கப்பட்டுள்ள ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக இறங்க உள்ளார். இது அவர் கால்பதிக்கும் 8-வது அணியாகும். கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி வழக்கம் போல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பந்து வீச்சில் சாஹல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் வலு சேர்க்கிறார்கள். வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளனர்.


வார்னர் தலைமையிலான ஐதராபாத் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டு பெங்களூருக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் அதே போன்று மிரட்ட காத்திருக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி இருவரும் இறங்கும் பட்சத்தில் கேன் வில்லியம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது. புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, சஹா, கலீல் அகமது என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)