கிரிக்கெட்

ஒரு ரன்னை குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்: சேவாக் விமர்சனம் + "||" + IPL 2020: Preity Zinta, Virender Sehwag Fume At Umpire's Controversial "Short Run" Call

ஒரு ரன்னை குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்: சேவாக் விமர்சனம்

ஒரு ரன்னை குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும்: சேவாக் விமர்சனம்
ஒரு ரன்னை குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்று சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை டெல்லி அணி வீழ்த்தியது.  முன்னதாக, பஞ்சாப் அணி வெற்றி இலக்கை துரத்தி விளையாடிக்கொண்டிருந்த போது  19-வது ஓவரில் மயங்க் அகர்வாலும் ஜார்டனும் இரு ரன்கள் ஓடி எடுத்தார்கள். 

ஆனால் ரன்களை முழுமையாக ஓடவில்லை எனக்கூறி  நடுவர்  பஞ்சாப் அணிக்க்கு  ஒரு ரன்னைக் குறைவாக வழங்கினார்ஆனால் தொலைக்காட்சி ரீபிளேயில் ஜார்டனின் பேட் கிரீஸைத் தொட்டது நன்குத் தெரிந்தது. கடைசியில் ஆட்டம் சமன் ஆனதில் நடுவர் முடிவு பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. 

அந்த இரண்டு ரன்களை அவர் வழங்கியிருந்தால் பஞ்சாப் அணி டெல்லியைத்  வென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.  நடுவரின் இந்த முடிவுக்கு பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.   முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியதாவது:ஆட்ட நாயகன் விருதுத் தேர்வை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். 

ஒரு ரன்னைக் குறைத்த நடுவருக்கு ஆட்ட நாயகன் விருது அளித்திருக்க வேண்டும். அதுதான் வித்தியாசப்படுத்திவிட்டது என்று கூறியுள்ளார். அதேபோல், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தாவும் நடுவரின் செயலை விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய வீரர் கே.எல் ராகுல் விலகல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக கே.எல் ராகுல் விலகியுள்ளார்.
2. ஐபிஎல்: பெங்களூரு- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
இவ்விரு அணிகள் இடையே ஏற்கனவே நடந்த லீக்கில் கொல்கத்தா அணி 82 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
3. இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட முடிவு?
ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
4. அரசு வேலையில் இருப்பதை போல சிஎஸ்கே வீரர்கள் சிலர் எண்ணுகின்றனர் - சேவாக் பாய்ச்சல்
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு ஆட்டங்களில் நான்கில் தோல்வி கண்டுள்ள சிஎஸ்கே அணி, 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது.
5. ஐபிஎல் கிரிக்கெட்; டோனி மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.