கிரிக்கெட்

விளையாட்டு துளிகள்..... + "||" + around the world

விளையாட்டு துளிகள்.....

விளையாட்டு துளிகள்.....
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் இயான் மோர்கன்.


* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் இயான் மோர்கன் நேற்று அளித்த பேட்டியில், ‘அதிரடியாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் பணியை ஆந்த்ரே ரஸ்செல் கொல்கத்தா அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரது இந்த அதிரடி ஆட்டத்துக்கு உதவிகரமாக இருப்பேன்’ என்றார்.


* துபாயில் நேற்று முன்தினம் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தன்னுடைய பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயலுகையில் வலது கணுக்காலில் காயம் அடைந்ததால் 4 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். அவருக்கு ஏற்பட்டு இருக்கும் காயத்தின் தன்மை தீவிரமானது என்றும் எஞ்சிய போட்டி தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றன.