ஐபிஎல் கிரிக்கெட்; டோனி மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் + "||" + Looked like MS Dhoni wasn't even trying, will rate his captaincy 4 out of 10: Virender Sehwag
ஐபிஎல் கிரிக்கெட்; டோனி மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஷார்ஜா,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்தப்போட்டியில், சென்னை அணியின் கேப்டன் டோனி 7-வது வீரராக இறங்கியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. டோனியின் கேப்டன்ஷிப் செயல்பாடு குறித்து விமர்சித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியிருப்பதாவது:-
டோனி இன்னும் முன் வரிசையில் களமிறங்க வேண்டும். அல்லது ரவீந்திர ஜடேஜாவையாவது இறக்கியிருக்க வேண்டும். தோனி அடித்த கடைசி ஓவர் 3 சிக்சர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏதோ இலக்குக்கு நெருக்கமாக வந்து விட்டது போல் காட்டும். ஆனால் உண்மை வேறு. தோனி நடுவில் இலக்கை விரட்டக்கூட முயற்சி செய்யவில்லை என்பது அவர் விட்ட டாட் பால்கள் மூலம் பட்டவர்த்தனமாகிறது.
30 ரன்களுக்கும் மேல் தேவை எனும்போது 3 சிக்சர்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை. கேதார் ஜாதவுக்கு முன்னதாகக் கூட தோனி இறங்கியிருக்கலாம். ஜாதவ் எதிர்கொண்ட பந்துகளை தோனி எதிர்கொண்டிருந்தால் சிஎஸ்கே 17-ரன்கள் வித்தியாசத்துடன் முடிந்திருக்காது. டோனியின் கேப்டன்ஷிப் செயல்பாட்டு மதிப்பெண் வழங்குவதென்றால் 10-க்கு 4 -மட்டுமே வழங்க முடியும்” என்றார். அதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும் டோனியை கடுமையாக சாடியுள்ளார்.