கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு + "||" + Kolkata Knight Riders opt to bowl

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட்:  மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அபுதாபி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஆபுதாபியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது.

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வீழ்ந்தது. அதே அபுதாபி மைதானத்தில் மீண்டும் களம் காணுவதால் இந்த முறை ஆடுகளத்தன்மையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப ஆடுவதற்கு முயற்சிப்பார்கள். முதல் ஆட்டத்தில் சிறந்த தொடக்கம் கிடைத்தும் பின்வரிசையில் தடுமாறி விட்டனர். ஆனாலும் பந்து வீச்சு, பேட்டிங்கில் வலுவான அணியாகவே மும்பை அணி தென்படுகிறது.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் மோர்கன், எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறன்படைத்த புயல்வேக வீரர் ஆந்த்ரே ரஸ்செல், சுழலில் மிரட்டும் சுனில் நரின், குல்தீப், ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா என்று நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருப்பதால் நம்பிக்கையோடு சவாலை தொடங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
2. ”கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் தொடரில் ”கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையாகும்.
3. ஐபிஎல் 2020: பிளே ஆஃப் சுற்று, இறுதிப் போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு
ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.
4. ஐபிஎல் தொடர்: லீக் சுற்றோடு சிஎஸ்கே வெளியேற்றம்- சாக்‌ஷி டோனி உருக்கமான பதிவு
இது ஒரு விளையாட்டு! யாரும் தோற்க விரும்புவதில்லை என சாக்‌ஷி டோனி பதிவிட்டுள்ளார்.
5. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது