ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது மும்பை + "||" + Hitman brings up his 37th IPL half-century off 39 deliveries.
ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது மும்பை
கொல்கத்தா அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணையித்துள்ளது.
அபுதாபி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஆபுதாபியில் இன்று நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்யுமாறு பணித்தார்.
இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக ஆடி 54 பந்துகளில் 80 ரன்களை குவித்தார். மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.