கிரிக்கெட்

‘டோனி சிறப்பாக விளையாட கொஞ்சம் காலம் பிடிக்கும்’ ஸ்டீபன் பிளமிங் சொல்கிறார் + "||" + ‘It takes a while for Tony to play better,’ says Stephen Pluming

‘டோனி சிறப்பாக விளையாட கொஞ்சம் காலம் பிடிக்கும்’ ஸ்டீபன் பிளமிங் சொல்கிறார்

‘டோனி சிறப்பாக விளையாட கொஞ்சம் காலம் பிடிக்கும்’ ஸ்டீபன் பிளமிங் சொல்கிறார்
பேட்டிங்கில் டோனி களம் இறங்கும் வரிசை குறித்து ஒவ்வொரு ஆண்டும் கேள்வி எழுப்பப்படுகிறது.
சார்ஜா,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்த ஒரு பேட்டியில், ‘பேட்டிங்கில் டோனி களம் இறங்கும் வரிசை குறித்து ஒவ்வொரு ஆண்டும் கேள்வி எழுப்பப்படுகிறது. அவர் 14-வது ஓவரில் களம் இறங்கியது சரியானது தான். அந்த சூழலுக்கு தகுந்தபடி அவர் பேட்டிங் செய்தார். அவர் நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்து விட்டு களம் திரும்பி இருக்கிறார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கத்தான் செய்யும். அவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிவர கொஞ்சம் காலம் பிடிக்கும். எங்களது பேட்டிங் கவலை அளிக்கக்கூடிய விதத்தில் இல்லை’ என்றார்.