கிரிக்கெட்

பெங்களூரு அணிக்கு கிட்டுமா 2-வது வெற்றி? + "||" + Will Bangalore get their 2nd win?

பெங்களூரு அணிக்கு கிட்டுமா 2-வது வெற்றி?

பெங்களூரு அணிக்கு கிட்டுமா 2-வது வெற்றி?
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை போராடி டெல்லி கேப்பிட்டல்சிடம் பணிந்தது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது தொடக்க ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வரை போராடி டெல்லி கேப்பிட்டல்சிடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் அடுத்தடுத்து 2 விக்கெட் சரிந்ததால் ஆட்டம் ‘டை’ ஆனது. பிறகு கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. மயங்க் அகர்வால் 89 ரன் விளாசியும் பலன் இல்லை. அத்துடன் ஒரு ரன் நடுவரால் மறுக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த விஷயங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு வெற்றிக்கணக்கை தொடங்கும் ஆவலில் பஞ்சாப் அணி உள்ளது. இந்த ஆட்டத்திலும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லுக்கு இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.


பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தேவ்தத் படிக்கல், டிவில்லியர்சின் அரைசதங்களும், யுஸ்வேந்திர சாஹலின் சுழல் ஜாலமும் வெற்றிக்கு வித்திட்டன. இதனால் புத்துணர்ச்சி அடைந்துள்ள விராட் கோலி படை 2-வது வெற்றிக்கு குறி வைத்திருக்கிறது. இரு அணிகளும் நல்ல நிலையில் இருப்பதால் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)