கிரிக்கெட்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்! + "||" + Dean Jones, former Australia cricketer and renowned commentator, passes away at 59

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்  டீன் ஜோன்ஸ் காலமானார்!
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்!
மும்பை

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில்  மாரடைப்பால் இன்று காலமானார்.  

ஜோன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 க்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இடம்பெற்று இருந்தார்.மேலும் மும்பையில் உள்ள ஏழு நட்சத்தி ஓட்டலில் தங்கி இருந்தார்.அங்கு அவர் மாரடைப்பால் காலமானார்.

ஜோன்ஸ் 1984 மற்றும் 1994 க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

1984 இல் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமானார். அவர் கிட்டத்தட்ட 9500  ரன்களை எடுத்து உள்ளார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டு உள்ள இரங்கலில் டீன்ஜோன்ஸ் காலமான செய்தியை நாங்கள் மிகுந்த சோகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர் திடீரென இருதய நோயால் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறோம், இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய உயர் தூதரக அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என கூறி உள்ளது.

தெற்காசியா முழுவதும் கிரிக்கெட் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் விளையாட்டின் சிறந்த தூதர்களில் ஒருவராக டீன் ஜோன்ஸ் இருந்தார். புதிய திறமைகளைக் கண்டுபிடிப்பதிலும், இளம் கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதிலும் அவர் ஆர்வமாக இருந்தார். அவர் ஒரு சிறந்த வர்ணனையாளராக இருந்தார் என கூறி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
2. இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை எனக் கூறி விமர்சனத்துக்கு உள்ளாகும் தோனி
அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால்தான் அவர்களை களமிறக்கவில்லை என தோனி கூறியது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
3. இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என தோனி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது -ஸ்ரீகாந்த்
தோனி சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் கூறுவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீகாந்த் கூறி உள்ளார்.
4. இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா...? முத்தையா முரளிதரன் வேதனை
ஈழத்தமிழர்களுக்கு எதிரானவன் போல் என்னை சித்தரிக்க முயலுகிறார்கள். 800 திரைபடத்தை பல்வேறு காரணங்களுக்காக அரசியல் ஆக்குகிறார்கள் என முத்தையா முரளிதரன் கூறி உள்ளார்.
5. சென்னைக்கு எதிரான போட்டி: ஒரே பந்தில் இரண்டு முறையில் ஆட்டமிழந்த ரஷித்கான்; டுவிட்டரில் விவாதம்
சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹைதராபாத் வீரர் ரஷீத் கான், ஒரே பந்தில் ஹிட் விக்கெட் மற்றும் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். அதுகுறித்து டுவிட்டரில் விவாதம் கிளம்பியுள்ளது.