கிரிக்கெட்

‘திட்டத்தை சரியாக செயல்படுத்தினோம்’ - ரோகித் சர்மா + "||" + ‘We implemented the plan properly’ - Rohit Sharma

‘திட்டத்தை சரியாக செயல்படுத்தினோம்’ - ரோகித் சர்மா

‘திட்டத்தை சரியாக செயல்படுத்தினோம்’ - ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் அந்த அணி அமீரகத்தில் தொடர்ச்சியாக சந்தித்த 6 தோல்விகளுக்கு (2014-ம் ஆண்டில் 5 ஆட்டங்களிலும், இந்த சீசனில் தொடக்க ஆட்டத்திலும்) பிறகு முதல்முறையாக வெற்றி கண்டுள்ளது. மும்பை கேப்டன் ரோகித் சர்மா (3 பவுண்டரி, 6 சிக்சருடன் 80 ரன்கள்) ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் கூறுகையில் ‘இங்கு நீண்ட இன்னிங்ஸ் ஆடுவது என்பது எளிதான காரியம் அல்ல. இங்குள்ள சீதோஷ்ண நிலையில் நீண்ட நேரம் விளையாடினால் நீங்கள் நிறைய சக்தியை இழக்க வேண்டியது வரும். கடைசியில் நானும் சற்று களைப்படைந்து விட்டேன். நிலைத்து நிற்கும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விளையாட வேண்டியது அவசியமானதாகும். எங்கள் அணியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு முதல் 6 ஓவர்களில் தான் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கிறது. டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் நன்றாக செயல்பட்டது சிறப்பான விஷயமாகும். களத்தில் நமது திட்டத்தை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆட்டத்தில் எங்களது திட்டத்தை கச்சிதமாக அமல்படுத்தி வெற்றி பெற்றோம்’ என்றார்.