கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் குறைவான பந்து வீச்சு விகிதம்; கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் + "||" + IPL Low delivery rate in the match; Captain Kohli fined Rs 12 lakh

ஐ.பி.எல். போட்டியில் குறைவான பந்து வீச்சு விகிதம்; கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஐ.பி.எல். போட்டியில் குறைவான பந்து வீச்சு விகிதம்; கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் குறைவான பந்து வீச்சு விகிதத்திற்காக பெங்களூரு அணி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
துபாய்,

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.  துபாயில் நேற்றிரவு நடந்த 6வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி பந்து வீசுவது என முடிவு செய்தார்.  இதனை தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.  பின்னர் 207 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 17 ஓவர்களில் 109 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதனால், பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த லீக் தொடரில் ஐ.பி.எல். விதிகளின் கீழ் குறைவான பந்து வீச்சு விகிதத்துடன் தொடர்புடைய தவறுக்காக பெங்களூரு அணியின் கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என ஐ.பி.எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வழிமுறை பின்பற்றாதோருக்கு அபராதம்: சென்னை மாநகராட்சியில் ரூ.3½ கோடி வசூல்
சென்னையில் பல்வேறு தளர்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அவ்வப்போது அரசு அறிவித்து வருகிறது.
2. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்காத பொதுப்பணித்துறை அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்காத பொதுப்பணித்துறை அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.
3. தனியார் மருத்துவமனையில் டெங்கு கொசுப்புழு: கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
4. உத்தரவை மீறி முடி திருத்தம் செய்ததால் குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு; ரூ.50 ஆயிரம் அபராதம்
உத்தரவை மீறி முடி திருத்தம் செய்ததால் சலூன் கடைக்காரரை குடும்பத்துடன் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததுடன், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அவர் தாசில்தாரிடம் புகார் செய்துள்ளார்.
5. டெல்லியில் பொது இடங்களில் குட்கா உட்கொண்டால் ரூ.2 ஆயிரம் அபராதம்
டெல்லியில் பொது இடங்களில் குட்கா, பான் மசாலா போன்றவை உட்கொண்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.