கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு + "||" + Chennai Super Kings won the toss and opt to bowl

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட்:  டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
துபாய்,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையை வீழ்த்தி அசத்திய சென்னை அணி, கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதனால், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை அணி இந்த போட்டியை எதிர்கொள்கிறது. 

டெல்லி கேபிடல்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது. இதனால்,  வெற்றியை தக்க வைக்க அந்த அணி முயற்சிக்கும்.

இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, டெல்லி அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பந்து வீசுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் டோனி பங்கேற்கிறாரா?
பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைபெறுகிறது.
2. ஐபிஎல் கிரிக்கெட்: வாழ்வா-சாவா போராட்டத்தில் சென்னை அணி
சென்னை அணியின் கேப்டன் டோனியின் மோசமான பேட்டிங்கே (9 ஆட்டத்தில் 136 ரன்) பின்னடைவுக்கு காரணமாக அமைகிறது.
3. சென்னை வீரர் பிராவோ மீண்டும் காயம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ மீண்டும் காயம் அடைந்தார்.
4. ஐபிஎல் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்
ஷிகர் தவானின் அதிரடியான சதத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
5. டெல்லி அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஒருபோதும் இல்லாத வகையில் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது