ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் முதலில் பேட்டிங்


ஐபிஎல் கிரிக்கெட்:  கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் முதலில் பேட்டிங்
x
தினத்தந்தி 26 Sep 2020 1:41 PM GMT (Updated: 26 Sep 2020 1:41 PM GMT)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.  இரு அணிகளுமே தங்களின் முதலாவது ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து உள்ளன.

இதனால், ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் ஆர்வம் காட்டும். இதனால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது.

Next Story