பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசியது
துபாய்,
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10 வது லீக் ஆட்டத்தில் இன்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு மும்பை அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்