கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + IPL Cricket: Hyderabad won by 15 runs

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்:  ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபி,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இன்றைய 11-வது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடின.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங்கை துவக்கிய ஐதராபாத், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.  இதன் மூலம் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு டெல்லி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஷா 2, தவான் 34 ரன்களில் ஆட்டமிழந்தனர்.  கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (17), ரிஷாப் பண்ட் (32), ஹெத்மையர் (21), ஸ்டாய்னிஸ் (11) மற்றும் அக்சர் பட்டேல் (5) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.

நார்ஜே (3), ரபடா (15) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.  ரஷீத் கான் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதனால் போட்டி முடிவில் டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
2. பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்பு தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி அமைக்கிறார்
பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
3. ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி
கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியது.
4. அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்
அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5. ஐ.பி.எல். போட்டி; 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.