கிரிக்கெட்

ராஜஸ்தானின் அதிரடி தொடருமா? + "||" + Will Rajasthan's action continue?

ராஜஸ்தானின் அதிரடி தொடருமா?

ராஜஸ்தானின் அதிரடி தொடருமா?
முதல் ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்ற கொல்கத்தா அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது.
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி தங்களது ஐ.பி.எல். பயணத்தை கம்பீரமாக தொடங்கி இருக்கிறது. சென்னைக்கு எதிராக 216 ரன்கள் குவித்தும், பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை ‘சேசிங்’ செய்தும் அசத்தியது. இரு ஆட்டங்களிலும் சுமித், சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினர். ஆனால் இவ்விரு ஆட்டங்களும் சிறிய மைதானமான சார்ஜாவில் நடந்தது. கொல்கத்தாவை இன்று துபாயில் சந்திக்க உள்ள ராஜஸ்தான் அணி அதே அதிரடி பாணியை தொடுத்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தனது முதல் ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் தோற்ற கொல்கத்தா அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது. சுப்மான் கில், மோர்கன், ரஸ்செல், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் முதல் 2 ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அவரும் பார்முக்கு திரும்பினால், கொல்கத்தா மேலும் வலுவடையும். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம திறமையுடன் மல்லுக்கட்டுவதால் ரசிகர்களுக்கு குதூகலமான விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.