கிரிக்கெட்

தொடர் தோல்வி- அணுகுமுறையில் மாற்றம் தேவை: டோனி ஒப்புதல் + "||" + May be we are getting too relaxed: MS Dhoni admits need to change approach as CSK lose 3 consecutive games

தொடர் தோல்வி- அணுகுமுறையில் மாற்றம் தேவை: டோனி ஒப்புதல்

தொடர் தோல்வி- அணுகுமுறையில் மாற்றம் தேவை: டோனி ஒப்புதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துபாய்,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தடுமாறி வருகிறது. 4 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி ஒரு வெற்றி, 3 தோல்விகள் என தத்தளித்து வருகிறது. சென்னை அணியில் துவக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.  டு பிளஸிஸ் மட்டுமே சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். ஏனைய பேட்ஸ்மேன்கள்  விரைவாக ரன்களை சேகரிக்க தடுமாறுகின்றனர். 

நேற்று ஐதாராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இதன்பிறகு வரணணையாளர்களிடம் உரையாடிய டோனி கூறியதாவது: என்னால் நிறைய பந்துகளை சரியாக மிடில் செய்ய முடியவில்லை. எப்படியாயினும் பந்தை அடித்து நொறுக்க வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம்.

நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. கேட்ச்களை எடுக்க வேண்டும், நோ-பால்கள் வீசக்கூடாது. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடியக்கூடியவைதான். பேட்ஸ்மென்களின் பலம் என்னவென்பதை உணர்ந்து வீச வேண்டும், 16-வது ஓவருக்குப் பிறகு செய்த தவறையே செய்தோம். ஒட்டுமொத்தமாக இன்னும் ஆட்டத்திறன் மேம்பட வேண்டும்.

யாரும் வேண்டுமென்றே கேட்சை விட மாட்டார்கள். ஆனால் இந்த மட்டத்தில் ஆடும்போது, கேட்ச்களை எடுத்தே தீர வேண்டும் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும். குறிப்பாக அணி சரியாக ஆடாத போது கேட்ச்கள் தான் நமக்கு வழிகாட்டும்.

இப்படி கேட்ச்களை நாக் அவுட் கட்டத்தில் விட்டால் என்ன ஆகும்? நாக் அவுட் கட்டத்தில் கேட்ச்களை விட மாட்டோம் என்று கூற முடியாது. எனவே நாம் தொழில்பூர்வமாக சிறப்பான பங்களிப்பை இந்த விஷயத்தில் செய்ய வேண்டும்.இந்தப்போட்டியில் பல சாதகமான விஷயங்கள் நடந்தன. எனவே, அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. டோனி இல்லாமல் இந்திய அணி தடுமாறுகிறது: முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து
இலக்கை எப்படி எட்டவேண்டும் என்பதும் டோனிக்கு நன்றாகத் தெரியும் என்று ஹோல்டிங் கூறியுள்ளார்.
2. ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடினால் டோனியால் சிறப்பாக விளையாட முடியாது - கபில் தேவ்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருப்பதாக டோனி கூறியுள்ளார்.
3. அடுத்த ஆண்டு வலுவாக வருவோம்- சிஎஸ்கே கேப்டன் டோனி
அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணியை ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என டோனி கூறினார்.
4. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 153 ரன்கள் குவிப்பு
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை அணிக்கு பஞ்சாப் அணி நிர்ணையித்துள்ளது.
5. ஐபிஎல் போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு இல்லை - டோனி சூசகம்
ஐபிஎல் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற போவதாக கடந்த சில நாட்களாக ஊகங்கள் எழுந்து வருகின்றன.