கிரிக்கெட்

ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சி? பிசிசிஐ தீவிர கண்காணிப்பு + "||" + Match-fixing In IPL 2020? Cricketer Reports Corrupt Approach, ACU Starts Investigations

ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங் செய்ய முயற்சி? பிசிசிஐ தீவிர கண்காணிப்பு

ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங் செய்ய  முயற்சி?  பிசிசிஐ தீவிர கண்காணிப்பு
கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
துபாய்,

கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  பெருந்தொற்று அச்சுறுத்தலால் பயோ பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் உள்ளனர்.  இதனால் வெளிநபர்கள் யாரும் நேரடியாக வீரர்களை அணுகுவதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைத்துள்ளது. 

 இந்த சூழலில், ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங் செய்வதற்காக சூதாட்ட தரகர்கள், வீரர் ஒருவரை  ஆன்லைன் மூலமாக அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அஜித் சிங் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.." மேட்ச் பிக்ஸிங் செய்ய உதவுமாறு தன்னை ஒருவர் அணுகியதாக ஒரு வீரர் எங்களிடம் தெரிவித்துள்ளார். 

ஊழலில் ஆர்வமுள்ள நபரை நாங்கள் கண்காணித்து வருகிறோம், அவர் பிடிபட சிறிது காலம் ஆகும்" என்று கூறினார். ஊழல் எதிர்ப்பு நெறிமுறைகளின்படி, ரகசிய நோக்கங்களுக்காக அந்த வீரரின் பெயர் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டு பிளசிஸ் அறிவிப்பு
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டு பிளசிஸ் அறிவித்துள்ளார்.
2. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
3. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
4. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.
5. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்