கிரிக்கெட்

கொல்கத்தா வீரர்கள் போராடிய விதம் பெருமை அளிக்கிறது; தினேஷ் கார்த்திக் சொல்கிறார் + "||" + The way the Kolkata players fought is proud; Dinesh Karthik says

கொல்கத்தா வீரர்கள் போராடிய விதம் பெருமை அளிக்கிறது; தினேஷ் கார்த்திக் சொல்கிறார்

கொல்கத்தா வீரர்கள் போராடிய விதம் பெருமை அளிக்கிறது; தினேஷ் கார்த்திக் சொல்கிறார்
கொல்கத்தா வீரர்கள் போராடிய விதம் பெருமை அளிக்கிறது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
சார்ஜா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சார்ஜாவில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இதில் டெல்லி நிர்ணயித்த 229 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி நெருங்கி வந்து தோற்றது. அதிரடி காட்டிக்கொண்டிருந்த இயான் மோர்கன் (5 சிக்சருடன் 44 ரன்) 19-வது ஓவரில் ஆட்டம் இழந்தது திருப்புமுனையாக மாறியது. கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்தது.

தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘எங்களது வீரர்கள் பேட்டிங் செய்த விதத்தை பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது. நம்பிக்கையை இழக்காமல் கடைசி வரை போராடுவது தான் கொல்கத்தா அணியின் தனித்துவம். இந்த ஆட்டத்தில் எங்கள் வீரர்கள் வெளிப்படுத்திய முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. 10 முதல் 13 ஓவர்களில் நாங்கள் அதிகமான பவுண்டரிகள் அடிக்கவில்லை. அந்த சமயம் இரு விக்கெட்டுகளையும் இழந்தோம். இது பின்னடைவாகிப்போனது. அந்த கட்டத்தில் 2-3 சிக்சர் அடித்திருந்தால் இலக்கை எட்டியிருக்கலாம். தொடக்க வரிசையை மாற்றுவது குறித்து சிந்திக்கவில்லை. ஒருவேளை இனி அது குறித்து பயிற்சியாளருடன் கலந்து ஆலோசிக்கலாம். ஆனாலும் சுனில் நரின் மீது இன்னும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.