கிரிக்கெட்

பஞ்சாப்புக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டோனி கூறியது என்ன? + "||" + Did the small things right. Believed in the process- Dhoni

பஞ்சாப்புக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டோனி கூறியது என்ன?

பஞ்சாப்புக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டோனி கூறியது என்ன?
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்தாடியது.
அபுதாபி,

ஐபிஎல் தொடரில்  அடுத்தடுத்த 3 தோல்விகளை எதிர்கொண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று பஞ்சாப் அணியை பந்தாடியது. 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது. 

இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 6 ஆம் இடத்தில் உள்ளது. சென்னை அணியில் மோசமான பார்ம் காரணமாக விமர்சனத்திற்கு உள்ளான ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி 83 ரன்களை குவித்து அசத்தினார். அதேபோல், மற்றொரு துவக்க வீரர் டூபிளஸிஸ் தனது அசத்தல் ஆட்டத்தை நேற்றும் வெளிப்படுத்தினார். 

பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு டோனி பேசியதாவது:- சிறு சிறு விஷயங்களை சரியாக செய்தோம். எங்கள் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்தோம். வாட்சன் வலைப்பயிற்சியில் நன்றாகவே செயல்பட்டார். அவருக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அவ்வளவுதான். டு பிளெசீஸ் தனது ஷாட்கள் மூலம் பந்துவீச்சாளர்களை குழப்பும் திறன் பெற்றவர். இருவரும் நன்றாக விளையாடினர். அடுத்து வரும் போட்டிகளிலும் நன்றாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார் 

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு டோனி தலைமை தாங்குவாரா? சிஎஸ்கே சிஇஓ பேட்டி
அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முழுமையாக மாற்றி அமைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின.
2. தன் பெயரில் வீடு கட்டிய ரசிகருக்கு டோனி உருக்கமான நன்றி!
டோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டை மஞ்சள் நிற பெயிண்டினால் அலங்கரித்து, அதில் டோனியின் படத்தை வரைந்து அசத்தினார்.
3. இந்த ஆண்டு எங்களுக்கானதாக அமையவில்லை - தோல்விக்குப் பிறகு டோனி பேட்டி
நடப்பு ஐபிஎல் தொடரில் சொதப்பலாக ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்றைய போட்டியிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
4. கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன்? சென்னை கேப்டன் டோனி விளக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. தோல்வி சோகத்துக்கு முடிவு கட்டுமா பஞ்சாப்?
தோல்வி சோகத்துக்கு பஞ்சாப் அணி முடிவு கட்டுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.