கிரிக்கெட்

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்? + "||" + India-Australia Test series starts with day-night match?

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்?

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்?
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பகல்-இரவு போட்டியுடன் தொடங்க கூடும் என கூறப்படுகிறது.
அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. ஒரு நாள் போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. பிரிஸ்பேனில் நவம்பர் 25-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் மூன்று ஒரு நாள் போட்டிகளையும், அடிலெய்டில் டிசம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் மூன்று 20 ஓவர் போட்டிகளையும் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்திய அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து போட்டி) டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மெல்போர்ன் (டிச.26-30), சிட்னி (ஜன.7-11), பிரிஸ்பேன் (ஜன.15-19) ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டி நடக்கிறது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருப்பதால் முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் நடப்பது உள்ளூர் மாகாண அரசாங்கத்தின் ஒப்புதலை பொறுத்து இறுதி செய்யப்படும். நவம்பர் 10-ந்தேதி ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இந்திய அணி அடுத்த வாரத்துக்குள் தேர்வு செய்யப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சாய்பல்லவி?
வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி தங்கையாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
2. சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்; கதாநாயகி கீர்த்தி சுரேஷ்?
சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாம் என கூறப்படுகிறது.
3. டெஸ்ட் தொடர்: மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து சென்றடைந்தது
டெஸ்ட் தொடரில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து சென்றடைந்து உள்ளது.
4. சூடானில் ஆயுத கடத்தல் தொடர்புடைய மோதலில் 25 பேர் பலி
சூடான் நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட ஆயுத கடத்தல் தொடர்புடைய மோதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.