கிரிக்கெட்

ஐபிஎல் 2020- புள்ளிகள் பட்டியலில் 5-ஆம் இடத்திற்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் + "||" + Chennai Super Kings climbed to the fifth spot in the Indian Premier League points table

ஐபிஎல் 2020- புள்ளிகள் பட்டியலில் 5-ஆம் இடத்திற்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2020- புள்ளிகள் பட்டியலில் 5-ஆம் இடத்திற்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு இடம் முன்னேறியுள்ளது.
அபுதாபி,

தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதால் நெருக்கடிக்குள்ளானது. ‘இது மூத்த வீரர்களை கொண்ட அணி; இந்த சீசனில் தேறாது’ என்றெல்லாம் சமூக வலைதளத்தில் தாறுமாறாக விமர்சிக்கப்பட்டது. 

ஆனால் தடாலடியாக எழுச்சி பெற்ற சென்னை அணி இரு தினங்களுக்கு முன்பு பஞ்சாப் அணியை துவம்சம் செய்தது. அந்த அணி நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ் இருவரும் அரைசதம் விளாசி விக்கெட் இழப்பின்றி எட்ட வைத்து சாதனை படைத்தனர். இதனால் சென்னை அணியின் நம்பிக்கையும், உத்வேகமும் இப்போது அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே, ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-ஆம் இடத்தில் இருந்து 5 இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.  மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி நேற்று தோற்றதால் அந்த அணி 7-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.