கிரிக்கெட்

ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி + "||" + IPL 2020 Cricket: Kolkata Knight Riders win the match against Chennai

ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபி,

இன்று நடைபெற்ற ஐ.பி.எல். 2020 கிரிக்கேட் போட்டியின் 21வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நல்ல தொடக்கத்துடன் ஆட்டத்தை எதிர்கொண்டது. சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 90 ரன்கள் எடுத்தது.

ஷேன் வாட்சன் 40 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுனில் நரைன் பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார். மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கேப்டன் டோனி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையத்து 11 பந்துகளில் 17 ரன்கள் அடித்த சாம் கர்ரன் அண்ட்ரே ரஸ்ஸல் வீசிய பந்தில் மார்கனிடம் கேட்ச் ஆனார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் பஞ்சாப் அணி 126 ரன்கள் எடுத்துள்ளது.
2. ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு
பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3. ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேடிங்கை தேர்வு செய்துள்ளது.
4. ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சென்னையில் 2.7 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மாநகராட்சி தகவல்
ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சென்னையில் 2.7 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
5. முக கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை
முக கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.