கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் + "||" + IPL Cricket: Hyderabad set a target of 202 for Punjab

ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்
பஞ்சாப் அணியுடனான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ஐதராபாத் அணி 201 ரன்கள் குவித்துள்ளது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 22வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


இதனையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர்-பேர்ஸ்டோ ஜோடி களமிறங்கியது. இவர்கள் இருவரும் ஐதராபாத் அணிக்கு அபாரமான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். டேவிட் வார்னர் 40 ரன்களில் 52 ரன்கள் எடுத்த நிலையில், மேக்ஸ்வெல் வீசிய பந்தில், ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோ 7 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். இதன் காரணமாக அணியின் ரன்ரேட் கணிசமாக உயர்ந்தது. இதற்கிடையில் அப்துல் சமாத்(8 ரன்கள்), மனீஷ் பாண்டே(1 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன.

தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சதத்தை நோக்கி முன்னேறிய ஜானி பேர்ஸ்டோ 55 பந்துகளில் 97 ரன்கள் எடுத்த நிலையில், ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் எல்.பி.டபில்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேன் வில்லியம்சன்(20 ரன்கள்) தனது பங்கிற்கு 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரை பறக்கவிட்டார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகள்? - கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் 24-ந்தேதி ஆலோசனை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு புதிய அணிகளை சேர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்?
அடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.
5. ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.