கிரிக்கெட்

தோல்விப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்? + "||" + Will Rajasthan put an end to defeat?

தோல்விப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்?

தோல்விப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்?
தோல்விப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்?
தனது முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று அடுத்த 4 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் 6 நாள் தனிமைப்படுத்துதல் நேற்று தான் முடிவடைந்தது. அதனால் அவர் உடனடியாக களம் இறக்கப்படுவாரா? என்பது தெரியவில்லை. கேப்டன் ஸ்டீவன் சுமித், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்தால் ராஜஸ்தான் அணி ஏற்றம் காணலாம்.

6 ஆட்டங்களில் 3-ல் வெற்றி கண்ட ஐதராபாத் அணி முந்தைய ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியை பதம் பார்த்தது. தொடக்க வீரர்கள் வார்னர், பேர்ஸ்டோ நிலைத்து நின்று ஆடுவது ஐதராபாத் அணிக்கு அவசியமாகும். கட்டுக்கோப்புடன் சுழற்பந்து வீசும் ரஷித்கான் (8 விக்கெட்) அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் வார்னரும், சுமித்தும் ஐ.பி.எல்.-ல் எதிரெணி களத்தில் மோதுவது சுவாரஸ்யமாக இருக்கும்.