கிரிக்கெட்

சிஎஸ்கே என்ற கப்பலில் ஏராளமான ஓட்டைகள்- டோனி விரக்தி + "||" + Too many holes in CSK’s ship, we need to get our act together: MS Dhoni

சிஎஸ்கே என்ற கப்பலில் ஏராளமான ஓட்டைகள்- டோனி விரக்தி

சிஎஸ்கே என்ற  கப்பலில் ஏராளமான ஓட்டைகள்- டோனி விரக்தி
சிஎஸ்கே என்னும் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் விரக்தியில் கூறியுள்ளார்.
அபுதாபி,

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் அணிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 7 ஆட்டங்களில் 5 -ல் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. இதனால், சென்னை ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றையப் போட்டியின் தோல்விக்குப் பின் டோனி கூறியதாவது:- பந்துவீச்சில் எதிரணியை நாங்கள் கட்டுப்படுத்தினோம். ஆனால், கடைசி 4 ஓவர்களில்தான் நாங்கள் தவறு செய்துவிட்டோம். அந்த 4 ஓவர்களில் நாங்கள் இன்னும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசியிருக்க வேண்டும். 

பேட்டிங்கை பொருத்தவரை சிறிது கவலையளிக்கும் விதத்தில் இருந்து வந்தது. இன்று வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. அதைச் சரிசெய்ய ஏதாவது செய்வது அவசியம். எங்கள் கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. பேட்டிங்கில் மிகப்பெரிய ஷாட்களை ஆடுவது அவசியம் என நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் மிகப்பெரிய ஷாட்களை ஆட வேண்டும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘இது எனது கடைசி ஆட்டம் அல்ல’- டோனி
வெற்றிக்கு பிறகு பேசிய டோனி, ‘பெரும்பாலான அணிகள் சிறப்பாக விளையாடிய சீசனில் இதுவும் ஒன்று. எங்களுக்கு கடினமான ஆண்டாக அமைந்திருக்கிறது.
2. ஐபிஎல்: சென்னை அணி வெற்றி, பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது
பஞ்சாப் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.
3. ஐபிஎல் கிரிக்கெட்; பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது.
4. ஐ.பி.எல். 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
5. சாம் கரண் சிறப்பாக பேட் செய்தார்- பொல்லார்ட் பாராட்டு
சென்னை அணியை 100 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டும். ஆனால் சாம் கரண் சிறப்பாக விளையாடினார் என பொல்லார்ட் கூறினார்.