மும்பை அணியுடனான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 27வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி மோதுகிறது. இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சையீத் மைதானத்தில் நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து 7.30 மணிக்கு தொடங்கவுள்ள ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.