கிரிக்கெட்

சுனில் நரின் பந்து வீச்சு மீது புகார் + "||" + Sunil Narin complains about the delivery

சுனில் நரின் பந்து வீச்சு மீது புகார்

சுனில் நரின் பந்து வீச்சு மீது புகார்
கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் அபாரமாக பந்து வீசி தங்கள் அணிக்கு 2 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தார்.
அபுதாபி, 

பஞ்சாப்புக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் அபாரமாக பந்து வீசி தங்கள் அணிக்கு 2 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தார். இந்த ஆட்டத்தில் அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக கள நடுவர்கள் உல்ஹாஸ் காந்தி, கிறிஸ் கப்பானி புகார் அளித்துள்ளனர். இதனால் சுனில் நரின் எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து பந்து வீசலாம். மறுபடியும் நரின் இதே போன்ற புகாரில் சிக்கினால் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்குட்படுத்தப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் வீரரான சுனில் நரின் சர்வதேச போட்டிகளில் ஆடிய போதும் இதே போன்ற சர்ச்சையில் அடிக்கடி சிக்கியது குறிப்பிடத்தக்கது.