கிரிக்கெட்

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: கேப்டன்கள் அறிவிப்பு + "||" + Women's Challenge Cricket: Captains Announcement

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: கேப்டன்கள் அறிவிப்பு

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: கேப்டன்கள் அறிவிப்பு
பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுகிறது.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 3 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுகிறது. எந்த மைதானம் என்பது இறுதி செய்யப்படாவிட்டாலும் சார்ஜாவில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது. இதற்கான மூன்று அணி வீராங்கனைகளை இந்திய பெண்கள் தேர்வு கமிட்டி நேற்று தேர்வு செய்து அறிவித்தது. இதன்படி சூப்பர் நோவாஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுரும், டிரைல்பிளாசர்ஸ் அணிக்கு ஸ்மிர்தி மந்தனாவும், வெலோசிட்டி அணிக்கு மிதாலி ராஜியும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு அணியிலும் 4 வெளிநாட்டவர் உள்பட 15 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்திய இளம் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா, மிதாலிராஜ் அணியில் அங்கம் வகிக்கிறார்.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 4 ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். நவ.4-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சூப்பர் நோவாஸ் அணி, வெலோசிட்டியை சந்திக்கிறது.