டெல்லி அணியில் இருந்து அமித்மிஸ்ரா ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி,
13-வது ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார். நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் மட்டும்தான் இஷாந்த் சர்மா விளையாடினார்.
அக்டோபர் 7-ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டதாக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லி அணியில் இருந்து அமித்மிஸ்ரா ஏற்கனவே காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்