கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 168- ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் + "||" + #ChennaiSuperKings score 167/6 in their 20 overs against #SunrisersHyderabad,

ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 168- ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 168- ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு 168- ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
துபாய்,

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  29-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சர்ம் கர்ரன், டு பிளசிஸ் களமிறங்கினர்.

முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது சென்னை அணி. இரண்டாவது ஓவரில் சாம் கரன் பவுண்டரி அடிக்க 7 ரன்கள் கிடைத்தது.  3வது ஓவரில் முதல் பந்தில் டு பிளசிஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைக்க சென்னை ஒரு விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்தது.

4வது ஓவரில் சாம் கரன் 2 பவுண்டரி, 2 சிக்சர் அடிக்க 22 ரன்கள் கிடைத்தது. 4வது ஓவர் முடிவில் சென்னை ஒரு விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்தது.

ஐந்தாவது ஓவரில் சாம் கரன் அவுட்டானார். அவர் 21 பந்தில் 31 ரன்னில் வெளியேறினார். ராயுடு ஒரு பவுண்டரி அடித்தார். சென்னை அணி 2 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.  பவர் பிளே முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 44 ரன்களை எடுத்தது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு மற்றும் வாட்சன் இருவரும் நிதானமாக விளையாடி சென்னை அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதையடுத்து அம்பத்தி ராயுடு (34 பந்துகளில்) 41 ரன்கள் எடுத்து 15 வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதனை தொடர்ந்து வாட்சனும் அடுத்த ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைதொடர்ந்து களமிறங்கிய டோனி 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  விக்கெட் 6 இழப்பிற்கு 167 ரன்களை எடுத்தது. இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டு பிளசிஸ் அறிவிப்பு
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டு பிளசிஸ் அறிவித்துள்ளார்.
2. ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஐதராபாத் அணி 4-வது வெற்றி
ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணி 4-வது வெற்றி பெற்றுள்ளது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியிடம் சென்னை தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியிடம் சென்னை அணி தோல்வியடைந்தது.
4. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
5. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.