கிரிக்கெட்

கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு + "||" + Gayle is likely to make his debut against Bangalore tomorrow

கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு

கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பு
கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாக பஞ்சாப் அணி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
*ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்து இருக்கும் 41 வயது அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்) இதுவரை களம் இறங்கவில்லை. கடந்த வாரம் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘புட் பாய்சன்’ பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவரால் விளையாட முடியாமல் போனது. தற்போது குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் கெய்ல் நாளை நடைபெறும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுவார் என்று பஞ்சாப் அணி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்திய ரக்பி அணிகளுக்கு 3 ஆண்டுகள் ஸ்பான்சர் அளிக்க ஒடிசா மாநில அரசு முன்வந்துள்ளது. இதற்காக இந்திய ரக்பி யூனியன், ஒடிசா மாநில அரசு இடையிலான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்படி 2023-ம் ஆண்டு வரை இந்திய ரக்பி அணிகளின் பயிற்சி, ஆட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவுகளை ஒடிசா அரசு ஏற்றுக்கொள்ளும்.

* டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் 19 வயதான லக்‌ஷயா சென் 21-9, 21-15 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ போபோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்றைய ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் களம் காணுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்க கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. நிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
நிவர் புயல் எதிரொலியாக, 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
3. சென்னையில் நாளை விடுமுறை கால அட்டவணைப்படி காலை 7 முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்
சென்னையில் நாளை விடுமுறை கால அட்டவணைப்படி காலை 7 முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4. நிவர் புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும் - வானிலை மையம்
நிவர் புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
5. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை வருகை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை (வியாழக்கிழமை) மாலை கோவை வருகிறார். அவர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.