கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து மிஸ்பா உல் ஹக் விலகல் + "||" + Misbah steps down as Pakistan chief selector, to remain head coach

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து மிஸ்பா உல் ஹக் விலகல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து மிஸ்பா உல் ஹக் விலகல்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர்,மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகிய இரு பொறுப்புகளிலும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார்.
இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார். லாகூரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மிஸ்பா உல் ஹக் இந்தத் தகவலை தெரிவித்தார்.

 ஜிம்பாவேக்கு எதிரான தொடருக்கு அணியை தேர்வு  செய்த பின்னர், தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற உள்ளதாகவும்” கூறினார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர்,மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகிய இரு பொறுப்புகளிலும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார். 

தனிப்பட்ட முடிவு காரணமாகவே தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் தனக்கு யாரிடம் இருந்தும் இவ்விகாரத்தில் அழுத்தம் வரவில்லை எனவும் மிஸ்பா உல் ஹக் கூறினார்.