கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு + "||" + Delhi Capitals opt to bat

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
துபாய்,

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுகிறது

இந்த சீசனில் பிரமாதமாக விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டு 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.  7 ஆட்டங்களில் 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் அடைந்துள்ள ராஜஸ்தான் அணிக்கு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் வருகை புதுதெம்பை கொடுத்துள்ளது. 

ஏற்கனவே சார்ஜாவில் நடந்த டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்த ராஜஸ்தான் அணி அதற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டு பிளசிஸ் அறிவிப்பு
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டு பிளசிஸ் அறிவித்துள்ளார்.
2. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
3. 13-வது ஐபிஎல் சீசனில் விருது வென்ற வீரர்கள் விவரம்...!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கே.எல் ராகுலுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
4. ஐபிஎல்: பிளே ஆப் சுற்றை ஐதராபாத் எட்டுமா? வெற்றி இலக்காக 150 ரன்கள் நிர்ணயம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.
5. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங்
ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும்