கிரிக்கெட்

தோல்வி சோகத்துக்கு முடிவு கட்டுமா பஞ்சாப்? + "||" + Will Punjab end the tragedy of failure?

தோல்வி சோகத்துக்கு முடிவு கட்டுமா பஞ்சாப்?

தோல்வி சோகத்துக்கு முடிவு கட்டுமா பஞ்சாப்?
தோல்வி சோகத்துக்கு பஞ்சாப் அணி முடிவு கட்டுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சீசனில் 14 ஆட்டத்தில் வெறும் 5 வெற்றிகளுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி இந்த ஆண்டு பிரமாதமாக விளையாடி வருகிறது. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டு நல்ல நிலையில் உள்ளது. டாப் 4 பேட்ஸ்மேன்களான ஆரோன் பிஞ்ச் (171 ரன்), தேவ்தத் படிக்கல் (3 அரைசதத்துடன் 243 ரன்), கேப்டன் விராட் கோலி (2 அரைசதத்துடன் 256 ரன்), டிவில்லியர்ஸ் (3 அரைசதத்துடன் 228 ரன்) ஆகியோர் தான் பெங்களூரு அணியின் தூண்கள். இவர்களில் யாராவது ஒருவர் நிலைத்து நின்று விட்டாலே வெற்றிக்கொடியை நாட்டிவிடுகிறார்கள். இதே போல் பந்து வீச்சில் ஓவருக்கு சராசரி 4.90 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ள சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் (5 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (10 விக்கெட்), கிறிஸ் மோரிஸ், உதனா வலு சேர்க்கிறார்கள். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் பெங்களூரு அணிக்கு பீல்டிங் தான் சற்று சொதப்பலாக உள்ளது. இதுவரை 12 கேட்ச்களை நழுவ விட்டு இருக்கிறார்கள். இந்த சீசனில் அதிக கேட்ச்களை கோட்டை விட்ட அணியாகவும் உள்ளது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

7 ஆட்டங்களில் 6-ல் தோற்று கடைசி இடத்தில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எஞ்சியுள்ள 7 ஆட்டங்களும் வாழ்வா-சாவா போராட்டம்தான். ஒன்றில் தோற்றாலும் கிட்டத்தட்ட பிளே-ஆப் கனவு தகர்ந்து விடும். பஞ்சாப் அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுலும் (387 ரன்), மயங்க் அகர்வாலும் (337 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். ஆனால் மிடில் வரிசையில் நிகோலஸ் பூரன் (212 ரன்) தவிர மற்றவர்களின் ஆட்டம் மோசமாக உள்ளது. அடிக்கடி வீரர்களை மாற்றி பார்த்தும் பிரயோஜனம் இல்லை. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் கூட 165 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது ராகுல், மயங்க் அகர்வால் அரைசதம் அடித்ததுடன் முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் உருவாக்கி தந்தும் முதுகெலும்பில்லாத மிடில் வரிசையால் 2 ரன்னில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. உடல்நலக்குறைவில் இருந்து மீண்டுள்ள ‘அதிரடி மன்னன்’ கிறிஸ் கெய்ல் இந்த சீசனில் முதல்முறையாக இந்த ஆட்டத்தில் இறங்குவார் என்று தெரிகிறது. அவரது வருகை பஞ்சாப் அணியின் தோல்விப்பயணத்துக்கு முடிவு கட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பஞ்சாப் அணி தனது ஒரே வெற்றியை பெங்களூருவுக்கு எதிராகத் தான் பெற்றது. அந்த ஆட்டத்தில் ராகுலின் சதத்தின் உதவியுடன் 206 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, பெங்களூருவை 109 ரன்னில் சுருட்டி மிரட்டியது. மறுபடியும் அவர்களை சந்திக்க இருப்பதால் பஞ்சாப் வீரர்கள் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். சிறிய மைதானமான சார்ஜாவில் போட்டி நடப்பதால் சிக்சர் மழையை எதிர்பார்க்கலாம்.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்


தொடர்புடைய செய்திகள்

1. டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக பஞ்சாபில் இருந்து டெல்லி புறப்பட்ட விவசாயிகள்
குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
2. டெல்லி போராட்ட களத்தில் லாரியை வீடாக மாற்றிய விவசாயி
சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹர்ப்ரீத் சிங் மட்டு என்ற விவசாயி, தனக்கு சொந்தமான கண்டெய்னர் லாரியை சொகுசு வீடாக மாற்றியமைத்துள்ளார்.
3. பஞ்சாப் ஓட்டலை முற்றுகையிட்ட விவசாயிகள் ; பின்புறம் வழியாக தப்பிய பா.ஜனதா நிர்வாகிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பா.ஜனதா நிகழ்ச்சி நடைபெற்ற பஞ்சாப் ஓட்டலை முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டக்கார்களிடம் இருந்து தப்பிக்க பின்புறம் வழியாக பா.ஜனதா நிர்வாகிகள் நழுவினர்
4. கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு: உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாசல பிரதேசத்துக்கு மத்திய குழுவினர் விரைந்தனர்
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது.
5. விவசாயிகள் போராட்டம் 15 நாள் வாபஸ்; பஞ்சாப்பில் நாளை முதல் ரெயில்கள் இயக்கம்
கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதியில் இருந்து நடந்து வந்த இந்த போராட்டங்களால் அங்கு சரக்கு ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் சேவை முற்றிலுமாக முடங்கி உள்ளது.