கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை அணுகிய சூதாட்ட தரகர் + "||" + Pakistan cricketer approached by suspected bookmaker

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை அணுகிய சூதாட்ட தரகர்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை அணுகிய சூதாட்ட தரகர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லாகூர், 

தேசிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் வீரரை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகி சூதாட்டத்தில் ஈடுபட ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அந்த வீரர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு இயக்குனர் ஆசிப் முகமதுவிடம் புகார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.