டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி


டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி
x
தினத்தந்தி 16 Oct 2020 12:17 AM GMT (Updated: 16 Oct 2020 12:17 AM GMT)

டோனியின் சாதனையை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முறியடித்தார்.


* பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடிய 200-வது ஆட்டம் இதுவாகும். அவர் ஐ.பி.எல்.-ல் 185 ஆட்டங்களும், சாம்பியன்ஸ் லீக்கில் 15 ஆட்டங்களும் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 200 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சிறப்பை கோலி பெற்றுள்ளார். இந்த வகையில் 2-வது இடத்தில் சோமர்செட் அணிக்காக ஆடிய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஹில்ட்ரெத் (196 ஆட்டம்), 3-வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும் டோனி (192 ஆட்டம்) ஆகியோர் உள்ளனர்.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை டோனி தக்க வைத்திருந்தார். அவர் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடி 4,225 ரன்கள் எடுத்திருந்தார். அச்சாதனையை கோலி நேற்று 10 ரன்கள் எடுத்த போது முறியடித்தார்.

* இந்த ஆட்டத்தில் பெங்களூரு வீரர் ஷிவம் துபே 14-வது ஓவரில் அடித்த சிக்சர் நடப்பு ஐ.பி.எல். தொடரின் 400-வது சிக்சராக அமைந்தது.

* பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் இந்த சீசனில் முதல் வீரராக 400 ரன்களை கடந்துள்ளார். ஆரஞ்சு நிற தொப்பியை தன் வசம் வைத்துள்ள அவர் 8 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 448 ரன்கள் குவித்துள்ளர்.


Next Story